தேவன்குறிச்சி மலை
சுற்றியுள்ள வயல்காடு
மெயின் ரோடிலிருந்து வலப்புறம் திரும்பினால் தேவன்குறிச்சி அருள்மிகு அக்னீஸ்வரர்-கோமதியம்மன் கோவில் முகப்பு
சுற்றுச்சுவர்- தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு செல்லும் படிகள்
கோவிலின் குளம்-நடுவில் தெரியும் “ஆமைப் பாறை” (ஆமை மாதிரி அமைப்பு கொண்டதால் அந்த பெயர்)
கோவிலின் தெப்பம்
மலையிலிருந்து நீர் வந்து சேரும் வற்றாத சுனை(ஒரு சில ஏப்ரல் மே தவிர :)). ) இந்த நீர் மிகவும் இனிப்பாக இருக்கும்
இந்த சுனையிலிருந்து தான் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுக்கப் படுகிறது
கோவில் மடப்பள்ளி-கோவில் கன்றுக்குட்டி
கோவில் குருக்கள்
வெளிப்பிரகார மண்டபம்
அக்னீஸ்வரர் சன்னிதி
சுற்றுவட்டாரத்தின் நான்கைந்து கிலோமீட்டர் தூரம் கேட்கும் இந்த மணியின் ஓசை
துவஜஸ்தம்பம்,பலிபீடம்,புதிதாக அமைக்கப்பட்ட சிறிய அனுமன் சன்னிதி, நவக்ரக சன்னிதி
மலைபாதை துவங்கும் இடம், மற்றும் எல்லா சன்னிதிகளும் தரிசித்து விட்டுவந்து கொண்டுவந்திருந்த புளியோதரை ,மிக்சர் மற்றும் உணவுப் பதார்த்தங்களை காலி பண்ணும் இடம். குடும்பத்தினர் வட்டமாக அமர்ந்து ,எங்கள் பாட்டி,எங்களுக்கு கையில் ஒவ்வொருவருக்கும் உணவு போடுவார்
சிவன் சன்னிதி, அம்மன் சன்னிதி பின்புறத்தோற்றம்
நரிக்குகை
மலையின் உச்சியில் பெருமாள் கோவில் உள்ளது
நரிக்குகையிலிருந்து கோவிலின் தோற்றம்
ஸ்தல வரலாறு- கோவில் சுவற்றில் சிற்பமாக- பசு சுயம்பு சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் காட்சி
நவக்ரக சன்னிதியின் தீபம்
ஒரு ஞாயிறு காலையில், வெளியூரிலிருந்து கோவிலுக்கு வந்திருந்த ஒரு குடும்பம்
மலைப்பாதைப் படிக்கட்டுகள்
பாதி மலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அனுமன் சன்னதி
தூரத்தில் தெரியும் கோபால்சாமி மலை
பாதி மலையில் இருந்து கோவில், தெப்பம். இடது ஓரத்தில் தனியே குட்டியாய் தெரியும் முருகன் சன்னிதி
தூரத்தில் தெரியும் மொட்டைமலை
சுனைக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன்
குளக்கரையில் நாகர் சன்னிதி
குளக்கரை பிள்ளையார் சன்னிதி
”அண்ணே என்னய ஒரு போட்டோ எடுங்கண்ணே”
இளைப்பாறும் குடும்பம்
கட்டுசாத மூட்டை
தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்லும் கல்படிகள்
வரும் வழியில் கண்ணில் பட்ட போஸ்டர் :) எங்க ஊரு மாயாண்டித் தேவரு (தியேட்டர் ஓனர்)திருந்தவே மாட்டாரு!